Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவர விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.
07:21 AM Mar 15, 2025 IST | Web Editor
Advertisement

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா  இணைந்து ராக்கெட் ஒன்றை விண்ணிற்கு வெற்றிக்கரமாக அனுப்பியுள்ளது.

Advertisement

நேற்று இரவு 7:03 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4:33) பால்கன் 9 ரக ராக்கெட்டில் ஏவப்பட்ட க்ரூ-10, இன்றிரவு 11.30 மணிக்கு ஐஎஸ்எஸ் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19 ஆம் தேதிக்குள் இருவரும் செயற்கைகோளில் பூமி திரும்புவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு பணிக்காக கடந்த ஜூனில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இருவரும், எட்டு நாட்கள் தங்க திட்டமிட்டிருந்த நிலையில், போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கின்றனர்.

Tags :
Crew-10 MissionNASAspacexSunita Williams
Advertisement
Next Article