விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் #SunitaWilliams!
விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஜூன் 6 ம் தேதி சென்றடைந்தனர். இதையடுத்து, ஜூன் 14ம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறால் இருவரும் அங்கேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் பூமிக்கு திரும்புவார் என்றும் நாசா அறிவித்தது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி இருவரும் நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள் : “இந்திய அணி பல திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது” – பந்துவீச்சு பயிற்சியாளர் #MorneMorkel பெருமிதம்!
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது :
" இது என்னுடைய மகிழ்ச்சியான இடம். விண்வெளியில் இருப்பதை நான் விரும்புகிறேன். நாங்கள் அமெரிக்க குடிமக்கள் என்பதால் அதிபர் தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான பணி. இந்த வாய்ப்பை நாசா எங்களுக்கு வழங்கியுள்ளது. நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் "
இவ்வாறு அவர் தெரிவித்தார்.