Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’மும்பை வான்கடே மைதானத்தில் சுனில் கவாஸ்கருக்கு ஆளுயர சிலை’ - மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

மும்பை வான்கடே மைதானத்தில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் சுனில் கவாஸ்கர் மற்றும் சரத் பவார் ஆகியோருக்கு ஆளுயர  சிலைகள் அமைக்கப்படும்
12:18 PM Aug 01, 2025 IST | Web Editor
மும்பை வான்கடே மைதானத்தில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் சுனில் கவாஸ்கர் மற்றும் சரத் பவார் ஆகியோருக்கு ஆளுயர  சிலைகள் அமைக்கப்படும்
Advertisement

மும்பை கிரிக்கெட் சங்கமானது,  வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கௌரவிக்கும் வகையில்  அருங்காட்சியகம் ஒன்றை வரும் ஆகஸ்ட் மாதம் திறக்க இருக்கிறது. இதற்கு ஷரத்பவார் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக அமையவுள்ள அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் புகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு ஆளுயர  சிலைகள் வைக்கப்பட்டு கௌரவிக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

Advertisement

குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மும்பையின் வளமான கிரிக்கெட் பாரம்பரியத்திற்கும் அதன் வெற்றியை வடிவமைத்த புகழ்பெற்ற நபர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக", வான்கடே மைதானத்தில் அமைந்துள்ள 'எம்சிஏ சரத் பவார் கிரிக்கெட் அருங்காட்சியகம்' ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியில் திறக்கப்படும்.

"அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில், பார்வையாளர்கள் ஸ்ரீ சரத் பவார் மற்றும் மும்பையின் மற்றும் இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு நபர்களில் ஒருவரான கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் வாழ்க்கை அளவிலான சிலைகளால் வரவேற்கப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987 வரை இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர்.  அவர் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர், மேலும் அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற சாதனைகளைப் படைத்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகு, கவாஸ்கர் ஒரு பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.

தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  தலைவராக இருக்கும் ஷரத் பவார், MCA, BCCI மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆகியவற்றின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் மற்றும் ஷரத் பவார் ஆகியோர் மும்பை கிரிக்கெட்டுடன் கொண்ட நீண்டகால தொடர்பு மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை  கௌரவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
mcaSharadPawarSportsNewssunilkavaskarwankadestadium
Advertisement
Next Article