Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாட்டில் கோடைமழை இயல்பை விட 20% அதிகம்" - வானிலை ஆய்வு மையம்!

10:47 AM May 31, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் கோடை மழை இயல்பைவிட 20 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.  அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.  ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது.  சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது.  வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.

இதற்கிடையே,  தமிழ்நாட்டில் கோடைமழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது.  இதனால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.  குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் கோடை மழை இயல்பைவிட 20 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாடு முழுவதும் மாா்ச் 1 முதல் மே 30ம் தேதி வரை கோடைமழை இயல்பாக 123 மி.மீ. பதிவாகும்.  ஆனால், நிகழாண்டு 142.5 மி.மீ. பதிவாகியுள்ளது.

இது இயல்பை விட 20 சதவீதம் அதிகமாகும்.  அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 485.2 மி.மீ. மழை பெய்துள்ளது.  நீலகிரி - 316.7, திண்டுக்கல் - 294, கோவை - 289 மி.மீ. மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7.9 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

சென்னையை பொருத்தவரை இயல்பாக 48.2 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டில் 20.9 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.  அதவாது, இயல்பைவிட 57 சதவீதம் குறைவாகப் மழை பெய்துள்ளது.  இதேபோல் சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளுா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கோடை மழை இயல்பான அளவை காட்டிலும் குறைவாகவே பெய்துள்ளது."

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Chennai Meteorological CenterRainrainfalltamil naduWeather
Advertisement
Next Article