Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'சுகர் பேபி என் சுகர் பேபி..' - வெளியானது ‘தக் லைஃப்’ படத்தின் செகண்ட் சிங்கிள்!

தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
06:47 PM May 21, 2025 IST | Web Editor
தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப்.

Advertisement

இதையும் படியுங்கள் : ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதன் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இதற்கிடையே, சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தில் செகண்ட் சிங்கிளான ‘Sugar Baby’ பாடல் வெளியாகியுள்ளது. இப்படம் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
ar rahmankamal hasanManirathnamnews7 tamilNews7 Tamil Updatessecond singleSilambarasanstrThug LifeTrisha
Advertisement
Next Article