Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திடீர் உடல்நலக்குறைவு - #ActorMohanlal மருத்துவமனையில் அனுமதி!

03:34 PM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகர் மோகன் லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேரு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.  இதனைத் தொடர்ந்து, வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மோகன்லாலின் 360வது படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். இவர் ‘ஆப்பரேஷன் ஜாவா’, ‘சவுதி வெள்ளக்கா’ படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.

இதேபோல கடந்த 2019-ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான  லூசிபர் திரைப்படம்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மோகன்லால் குஜராத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பினார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐந்து நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Actor MohanlallHospitalizedLalettanMohanlal
Advertisement
Next Article