Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

12:24 PM Nov 09, 2023 IST | Student Reporter
Advertisement
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தொடர் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 2
நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.  பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மேலும் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து உயர்ந்து வருகின்றது.  மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான குருமலை குளிப்பட்டி மேல்குருமலை உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Advertisement

அருவியின் கீழ் பகுதியில் உள்ள கோயில் வளாகம் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. மேலும் அருவி மற்றும் கோயில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லாமல் தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரூபி.காமராஜ்

Tags :
#forest officers announcedpeople are prohibitedsudden floodThirumoorthy Fallsthirupur districtTourists are prohibited
Advertisement
Next Article