இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு - மேகாலயா, கார்கில் பகுதி மக்கள் அச்சம்!
மேகாலயாவில் இன்று 3.5 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்ட நிலையில், லடாக்கின் கார்கில் பகுதியிலும் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு கரோ மலைப் பகுதியில் இன்று பிற்பகல் 2.37 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. இந்த நிலஅதிர்வானது 12 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
இதையும் படியுங்கள் : கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான ‘கேமர் தாத்தா’..!
இதனைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசமான லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று பிற்பகல் 2.42 மணியளவில் 3.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இதிலும் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. இந்தியாவில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.