கேப்டனாக களமிறங்கும் சுப்மன்... ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
குரூப் I-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்திய அணி
ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரெல், நிதீஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே.
இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்பட மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.