Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கண்ணீர் மல்க ஆசிரியர்களை வழி அனுப்பி வைத்த மாணவ மாணவியர்கள்!

இடம் மாறுதலில் வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியரை கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த மாணவ மாணவியர்கள்
05:52 PM Jul 15, 2025 IST | Web Editor
இடம் மாறுதலில் வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியரை கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த மாணவ மாணவியர்கள்
Advertisement

 

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆண்டுகளாக பணியாற்றி மாணவர்களை 100% தேர்ச்சி பெற வைத்த சமூக அறிவியல் ஆசிரியர் கா.பால்பாண்டி, அறிவியல் ஆசிரியர் ரெ.பூங்குழலி, மற்றும் 2 ஆண்டுகள் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் பொன்வடிவு ஆகியோர் மாணவர்களிடம் ஆசிரியர்களாக மட்டுமின்றி நலன் விரும்பிகளாக இருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு இவர்களை மிகவும் பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று 3 ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாறுதலில் செல்ல உத்தரவு பெற்றுள்ளனர். இன்று காலை பணியிடமாறுதல் உத்தரவுடன் மேற்பனைக்காடு பள்ளிக்கு வந்த போது ஆசிரியர்கள் எல்லாம் வேற ஊருக்கு போறாங்களாம் என்ற தகவல் மாணவ, மாணவிகளுக்கு தெரிந்ததும் ஆசிரியர்களை சூழ்ந்து கொண்ட மாணவ, மாணவிகள் நீங்க போகாதீங்க சார், போகாதீங்க மிஸ் என்று மாணவ, மாணவிகள் கலங்கி நின்ற போது ஆசிரியர்களும் கலங்கிவி்ட்டனர்.

வேறு பள்ளிக்கு போனாலும் நாங்க உங்களைப் பார்க்க வருவோம் என்று தற்காலிக ஆறுதல் வார்த்தைகளை கூறி மாணவ, மாணவிகளை சமாதானம் கூறி கலங்கிய கண்களுடன் விடைபெற்று வெளியேறினர் ஆசிரியர்கள்.

தான் இந்தப் பள்ளியைவிட்டு போகும் போது மாணவர்களுக்கு பந்துகளை பரிசாக வழங்கி கண்கள் கலங்க விடைபெற்றார் ஆசிரியர் பால்பாண்டி. பல பள்ளிகளில் சில ஆசிரியர்கள் எப்போது இந்தப் பள்ளியைவிட்டு போவார்கள் என்ற எண்ணம் பல மாணவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பல ஆசிரியர்கள் அடுத்த பள்ளிக்கு செல்வதை மாணவர்களின் மனங்கள் ஏற்கவில்லை என்பது இந்த ஆசிரியர்கள் மாணவர்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.

Tags :
EducationemotionalPudukkottaiStudentLoveTeacherTransferTNnews
Advertisement
Next Article