Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Siddha ,ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் | அக்.17ம் தேதி கலந்தாய்வு

08:13 AM Oct 14, 2024 IST | Web Editor
Advertisement

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 17ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

Advertisement

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு 2024-25ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி 27ம் தேதி நிறைவடைந்தது. இதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,558 பேரும், 7.5 சதவிகித இடங்களுக்கு 1,321 பேரும், அகில இந்திய இதுக்கீட்டு இடங்களுக்கு 1,460 பேரும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,428 பேரும் என மொத்தம் 8,797 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 8,397 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியுடையதாக ஏற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் முடிந்து தகுதியான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 17ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனை வளாகத்தில் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள் : இந்த வாரம் #BiggBoss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் யார் தெரியுமா?

இந்த தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 653 மதிப்பெண் பெற்ற ஹர்ஷினி ஜோதி முதல் இடத்தையும், 633 மதிப்பெண் பெற்று தீப்தி 2வது இடத்தையும் 628 மதிப்பெண்கள் பெற்று பிரவீனா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 பேர் மாணவிகள் இருவர் மட்டுமே மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு 521 மதிப்பெண் பெற்று தர்ஷினி முதல் இடத்தையும், 510 மதிப்பெண் பெற்று மதுமிதா 2வது இடத்தையும், 58 மதிப்பெண் பெற்ற சுபா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Tags :
AyurvedaHomeopathy coursesNews7Tamilnews7TamilUpdatessiddhastudentsUnani
Advertisement
Next Article