போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!
ஆத்தூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் பட்டிக்கட்டில் நின்று ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலை உள்ளதால், மேற்கொண்டு பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்
நிலைப்பள்ளியில் கூடமலை, கிருஷ்ணாபுரம், கடம்பூர், தண்ணீர்பந்தல்,
ஆணையம்பட்டி, புதூர், நடுவலூர், ஒதியத்தூர், பள்ளக்காடு ஆகிய பகுதிகளில்
இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம்
வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே காலையில் பள்ளிக்கு வரும்
மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பேருந்தின் படிக்கட்டில்
நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்,
இந்நிலையில், இன்று காலை தம்மம்பட்டியில் இருந்து கெங்கவல்லி வழியாக ஆத்தூர்
நோக்கி சென்ற தனியார் பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்று
கொண்டு பள்ளிக்கு ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
இதனிடையே போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் மாணவர்களின் அலப்பறை அதிகமாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பயணிக்க கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென மாணவர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.