Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாணவர்கள் இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்... வருகிறது அதிரடி திட்டம்!

09:41 AM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடுமுழுவதும் 29,009 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த பள்ளிகளில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் 9 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9,10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம்,  அறிவியல் பாடங்களுக்கும்,  11, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம்,  உயிரியல் பாடங்களுக்கும் புத்தகம் பார்த்துதேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  ரோகித் சர்மாவை பாராட்டி கவிதை பாடிய ரசிகர் – வீடியோ இணையத்தில் வைரல்!

சென்னை,  டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்த தேர்வுகளை நவம்பர்,  டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சோதனை முறைக்குப் பின் பெறப்படும் கருத்துகள்,  பகுப்பாய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படும்.  கொரோனா காலத்தில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்த டெல்லி பல்கலைக்கழகத்திடமும் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
CBSECBSE Board Exam 2024ExamsOpen BookOpen Book Examstudents
Advertisement
Next Article