Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேலைநிறுத்தம் எதிரொலி - ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்

06:00 AM Jan 09, 2024 IST | Jeni
Advertisement

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ராமநாதபுரத்தில் பேருந்துகள் இயக்கப்படாமல், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதையும் படியுங்கள் : போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதி

ராமநாதபுரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், நகர்ப்பகுதி பணிமனையில் இருந்து எந்தவிதமான பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்க முன்வராததால் நீண்ட நேரமாக மக்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். ராமநாதபுரம் புறநகர் பணிமனையில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

Tags :
BUSBusStrikeRamanathapuramTNGovtTNSTCTransportStrike
Advertisement
Next Article