Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தெரு நாய்கள் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ராகுல் காந்தி வரவேற்பு!

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.
04:15 PM Aug 22, 2025 IST | Web Editor
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.
Advertisement

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 11 ஆம் தேதி  டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து 8 வாரத்திற்குள் காப்பகத்திற்கு மாற்றுமாறு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இது உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அமர்வு இன்று உத்தரவு பிறபித்தனர். அந்த உத்தரவில், தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அதனை கருத்தடை செய்து,உரிய தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடிக்கப்பட்ட பகுதியிலே விடலாம். அதை வேளையில் மிகவும் ஆக்ரோஷமாகவும், ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை மீண்டும் பிடிக்கப்பட்ட பொதுபகுதியில் விடக்கூடாது.” என்று தெரிவிக்கப்படிருந்தது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்பதாக மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில்,

”விலங்குகள் நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான படியைக் குறிக்கும் வகையில், தெருநாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை நான் வரவேற்கிறேன். இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும் அறிவியல் பகுத்தறிவில் வேரூன்றியதாகவும் உள்ளது.”

என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
latestNewsRahulGandhistreydogcasesupremcourt
Advertisement
Next Article