Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#STR49 | சிம்புவிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை?

08:10 AM Oct 26, 2024 IST | Web Editor
Advertisement

அஸ்வத்  மாரிமுத்து இயக்கத்தில், சிம்பு நடிக்கும் புதிய படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டும் பழைய இடத்தை பிடித்த சிம்புவின் நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு பத்து தல படம் வெளியானது. இந்த சூழலில், சிம்பு அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சிம்பு தனது 49வது படத்தில் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தில் தம், மன்மதன், வல்லவன் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களின் கலவையாக, 90ஸ் கிட்ஸ் மோடில் நடிப்பதாகவும் சிம்புவே தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, இந்த படத்தின் போஸ்டர் கடந்த 21ம் தேதி வெளியானது. இதில் 2000-களில் கலக்கிய தனது மாஸ் லுக்கில் சிம்பு போஸ்டர் இருந்தது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விண்டேஜ் சிம்புவை திரையில் கொண்டுவர ஒரு பெரிய பட்டியலை போட்டதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். இந்த லிஸ்ட் இணையத்தில் வைரலானது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற படத்தை அஸ்வத் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பின் சிம்புவின் படத்தை துவங்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் மீனாட்சி சவுத்ரி நடித்தார். சமீபத்தில் வெளியான விஜயின் ‛தி கோட்' படத்திலும் மீனாட்சி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article