Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'STR 50' - புது அவதாரம் எடுக்கும் சிம்பு!

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 50வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
03:01 PM Feb 03, 2025 IST | Web Editor
Advertisement

`பத்து தல' படத்திற்கு பிறகு, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.  இது அவரின் 48-வது திரைப்படமாக உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின்  தயாரிப்பு பணியிலிருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்படம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தது.

Advertisement

இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 50வது படம் குறித்த அப்டேட்  வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிம்பு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  “இறைவனுக்கு நன்றி. தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. இதைத் தவிர எனது 50-வது படத்தை தொடங்குவதற்கு சிறந்த வழி எதுவுமில்லை. எனக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் இது கனவு திரைப்படம். நீங்க இல்லாமல நான் இல்ல” என்று கூறி புதிய போஸ்டரை வெளிட்டுள்ளார். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

ராஜ்கமல் நிறுவனம்  சிம்புவின் 48வது படத்தில் இருந்து விலகியதையடுத்து, தேசிங்கு பெரியசாமி இயக்கும் அந்த படத்தை  சிம்புவே  ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தனது 50வது படமாக அறிவித்திருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் சிம்பு கமல்ஹாசனின்  ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளதால், இது அவரின் 48வது திரைப்படமாக அமைந்துவிட்டது. சிம்புவின் 49வது படத்தை  ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். சமீபத்தில்  அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இது அவரின் 51வது திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Desingh PeriyasamySilambarasanTRsimbuSTR50
Advertisement
Next Article