Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புயல் நிவாரண உதவிகள் - தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவிகளை வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!

07:24 AM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மணலி பகுதி மக்களுக்கு நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement

மிக்ஜாம் புயல்  சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.  புயலுடன் கூடிய கனமழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  அரசு அதிகாரிகள்,  மீட்புப் படையினரின் தொடர் முயற்சியால், பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு முயறிசிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், அதனை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும்,  அரசியல் கட்சிகளும்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் நியூஸ்7 தமிழ் அன்பு பாலமும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது.

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களை தேர்ந்தெடுத்து, ஒய் ஆர் சி யூனிட் புது கல்லூரி, மற்றும் திருவொற்றியூர் டி வி எம் சேவா பாலம், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கியது.

மணலி புதுநகர் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் உடை மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டன. புது கல்லூரி பேராசிரியர் சுலைமான் மற்றும் அரிமா சங்கம் புதூர் தலைவர் டில்லி ஆகியோர் இணைந்நு இந்த நல திட்ட உதவிகளை வழங்கினர்.

Tags :
Anbu palamMikjam stormnews7 tamilNews7 TamilUpdatesTVM Seva palamYRC Unit New College
Advertisement
Next Article