Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#StopHarassment: “தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள்” - நடிகை ஷனம் ஷெட்டி அதிர்ச்சித் தகவல்!

05:13 PM Aug 20, 2024 IST | Web Editor
Advertisement

“மலையாள திரையுலகம் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்களும், அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளது” என நடிகை ஷனம் ஷெட்டி குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த, நவீன நங்கையர் பவுண்டேஷன் சார்பில் நடிகை ஷனம் செட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;

“பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுவதற்கே கஷ்டமாக உள்ளது.  ஒரு வாரத்திற்கு 4 வழக்குகள் பதிவாகின்றன. கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரியில் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே அதில் குற்றவாளியாக இருக்கிறார். பெங்களூருவில் இரு சக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். புனேவில் கழிவறையில் வைத்து பள்ளி மாணவிகளை அந்த பள்ளியில் இருக்கும் பணியாளர்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பெண்களை வெளியில் போகாதே, இது போன்ற ஆடைகளை போடாதே!, யாரையும் நம்பாதே என்று சொல்லி வளர்த்துக் கொண்டு இருக்கிறோம். இதை எவ்வளவு நாளைக்கு சொல்வது.

ஆனால் அடிப்படை மாற்றம் ஆண்களின் மனதில் கொண்டு வர வேண்டும்.  அடுத்த தலைமுறையிலாவது மாற்றம் வர வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளோம். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பலரும் தப்பித்து வருகின்றனர். நிர்பயா வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கான அனுமதி கேட்டு காவல் ஆணையரை சந்திக்க வந்து உள்ளோம். காவல்துறை அதிகாரிகள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் நிறைய பெண்கள் சந்திக்கும் பிரச்னையாக இது உள்ளது. காவல்துறையின் ஆதரவு இல்லாமல் இதனை செய்ய முடியாது.

 

பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு குடும்பத்திற்கு உள்ளேயும் கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தயக்கம் இல்லாமல் அனைவரும் முன் வந்து இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும். ஒரு மாற்றம் நிச்சயமாக தேவைப்படுகின்றது. வரும் சனிக்கிழமை அன்று நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது. ஆனால் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இது போன்று ஒரு அறிக்கையை அவர்கள் கொண்டு வந்ததற்கு ஹேமா அவர்களுக்கும், கேரள அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் தமிழ் திரை உலகிலும் நடைபெறுகின்றது. இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. என்னுடைய சொந்த அனுபவத்திலும் நான் சொல்லி உள்ளேன். ஆனால் இது பற்றி அன்றே ஏன் சொல்லவில்லை என்று சொல்வார்கள். செருப்பால் அடிப்பேன் நாயே என்று நான் கூறி நான் போனை கட் செய்து உள்ளேன்.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற கொடூரமான சூழ்நிலைக்கு எதிராக நான் குரல் கொடுத்து உள்ளேன்.  ஆனால் சினிமா துறையில் அனைவருமே இப்படியா என்றால், அப்படி கிடையாது. பெண்கள் மட்டும் அல்ல. ஆண்களும் இந்த சிக்கல்களை சந்திகின்றனர். அட்ஜெட்ஸ்மண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்றால் காரி துப்பிவிட்டு வெளியில் செல்லுங்கள். இதுமாதிரி ஒரு படமே வேண்டாம். உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

மலையாளத்தில் இரண்டு படம் நடித்துள்ளேன். என்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டார்கள். நம் உரிமைக்காக நாம் போராடி தான் ஆக வேண்டும். அனைத்துக்கும் வரி செலுத்துகிறோம். வரி செலுத்தி என்ன பிரயோஜனம்? ஒரு பாதுகாப்பு கூட இல்லை. கேள்வி கேளுங்கள். கேட்டுகிட்டே தான் இருக்க வேண்டும்”

இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
KollywoodMalluwoodsanam shettySexual harassment
Advertisement
Next Article