Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை - டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

11:13 AM Aug 21, 2024 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தில், தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி சார்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரையில் தேசிய மாணவர் படை  முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனர்.

இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அனுமதி பெறாமல் போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டதும், 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு டிஜிபிக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 3 நாட்களுக்குள் காவல்துறை மற்றும் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
KrishnagirincwSexual harassmentTN DGP
Advertisement
Next Article