Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#StopHarassment | பாலியல் புகார்களை பெற கல்லூரிகளில் 'புகார் குழு' - மாநில மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்!

09:47 AM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பெறுவதற்கு 'உள்ளக புகார் குழு' ஒன்றை அமைக்க மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

சமீப நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக மாநில மகளிர் ஆணையத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 2 பேராசிரியர்கள் உள்பட 4 பேர் மீது காவல் நிலையயத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் 'விஸ்வரூபம்' எடுத்த நிலையில், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இதுபோன்ற பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பெறுவதற்கு ஏதுவாக 'உள்ளக புகார் குழு' ஒன்றை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, மாநில மகளிர் ஆணையம் இன்று (செ.2) நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அமைக்கப்படும் உள்ளக புகார் குழுவில், மாணவிகள் தரப்பில் ஒருவரும், பெண் பேராசிரியர் ஒருவரும், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவரும் இடம் பெறவேண்டும் என மாநில மகளிர் ஆணையம் வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாநில மகளிர் ஆணையம், கல்வி நிறுவனங்களில் மாணவிகளை நேரில் சந்தித்து பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன் விளைவாக தற்போது மாணவிகள் தைரியமாக புகார்களை தெரிவிக்க முன்வருகிறார்கள் எனவும், எங்களிடம் வரும் புகார்கள் மீது காவல்துறை உதவியுடன் நாங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் எனவும் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தார்.

Tags :
COLLEGESexual HarrassmentStop HarrassmentTNSCW
Advertisement
Next Article