Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘தென் இந்திய கலாச்சாரத்தை சிதைப்பதை நிறுத்துங்கள்’... #Onam சத்யாவில் சப்பாத்தி வைத்த தனியார் நிறுவனத்தால் இணையவாசிகள் அதிருப்தி!

04:47 PM Sep 13, 2024 IST | Web Editor
Advertisement

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில், சத்யா விருந்தில் சப்பாத்தி சேர்க்கப்பட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

கேரளாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதன் வண்ணமயமான சடங்குகள் கேரள மாநிலத்தைத் தாண்டியும் உலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ளது. பல வண்ணப் பூக்கோலங்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் உள்ளிட்டவை இப்பண்டிகையின் சிறப்பு. இவை மட்டுமல்லாது மற்றொரு சிறப்பு, சத்யா எனப்படும் அறுசுவை விருந்து.

பண்டிகைகளும் உணவுகளும் நமது கலாசாரத்துடன் இணைந்தவை. ஒவ்வொரு பண்டிகையின்போதும் ஒருவகை சிறப்பு உணவு, அதன் மகத்துவத்தை மேலும் கூட்டுகிறது. அந்த வகையில் ஓணம் பண்டிகைக்கு மேலும் சிறப்பைக் கூட்டக்கூடியது இந்த சத்யா. இந்நிலையில் ஏதர் எனர்ஜி நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ஓணம் சத்யா பெரும் பேசுபொருளாகியுள்ளது.

https://twitter.com/tarunsmehta/status/1833775483235754304

மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏதர் எனர்ஜி சமீபத்தில் தனது அலுவலகத்தில் ஓணம் கொண்டாட்டத்தை நடத்தியது. அப்போது ஊழியர்களுக்கு பாரம்பரிய சத்யா விருந்து அளித்தது. இதனை பெங்களூரைச் சேர்ந்த ஏதரின் இணை நிறுவனர் தருண் மேத்தா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் ஒரு படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. காரணம் அதில் சப்பாத்தி இருந்தது.

ஓணம் என்பது புராண மன்னர் மகாபலியின் வருகையை கொண்டாடும் கேரளாவின் குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வாகும். இந்நிகழ்வில் வட இந்தியர்களின் உணவு என கூறப்படும் சப்பாத்தி சேர்க்கப்பட்டது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வடஇந்தியாவின் கலாச்சாரத்தை ஓணத்தில் இணைக்க வேண்டாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சத்யா என்பது வெறும் உணவு அல்ல. பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் கேரளாவின் வளமான சமையல் பாரம்பரியத்தின் சின்னம்’ என தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Ather EnergyKeralaonam celebrationSadya
Advertisement
Next Article