Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2022-23-ல் 59,000 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்...

10:37 AM Mar 30, 2024 IST | Web Editor
Advertisement

2022 - 23 ஆம் ஆண்டில்  59,000-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணிற்கும்,  21 வயதுக்கு கீழ் உள்ள ஆணுக்கும் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாக கருதப்படுகிறது.  இதில் பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வரும் நிலையில், இன்று ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும்,  இதனை தடுக்க முடியவில்லை.

இதையும் படியுங்கள் : ஆரத்தி எடுத்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்த விவகாரம் – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!

2022-23 ஆம் ஆண்டிற்கான குழந்தை திருமணங்கள் குறித்த ஆய்வை சிவில் சமூக அமைப்புகள் மேற்கொண்டன.  ஆய்வின் முடிவில்,  நாட்டில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 265 மாவட்டங்களில் கிட்டதட்ட 59,000 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, இதில் 60% பெண்கள் 15 முதல் 18 வயதுடையவர்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் பீகார் 31 சதவீத்ததுடன் முதலிடத்தில் உள்ளது.  இதையடுத்து,  மேற்குவங்கம் (11%),  உத்தரப்பிரதேசம் (11%) மற்றும் ஜார்க்கண்ட் (10%) உள்ளது.  சிவில் சமூக அமைப்புகள் மூலம் இதுவரை 59,364 குழந்தைத் திருமணங்களைத் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக,  49,813 குழந்தை திருமணங்கள் பெற்றோரின் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் நிறுத்தப்பட்டன.  மிதமுள்ள 9,551 குழந்தை திருமணங்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் மேற்கு வங்கம் (32%), பீகார் (7%) , அஸ்ஸாம் (27%), ஒடிசா (8%) மற்றும் மகாராஷ்டிரா (6%) ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

Tags :
Child MarriagechlidrenCivil Society OrganisationsIncreaseIndiastop child marriage
Advertisement
Next Article