#Turkey நாடாளுமன்றத்தில் அடிதடி! எம்.பிக்களுக்கு ரத்தக்காயம்!
துருக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தொழிலாளர் கட்சியின் எம்பி கேன் அதாலே குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்தது அடிதடியில் முடிந்தது.
இடதுசாரி அரசியல் கட்சியான தொழிலாளர் கட்சி துருக்கியில் பிரதான எதிர்க் கட்சியாகும், இது குர்திஷ் மக்களின் உரிமைகளை வலுவாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் எர்டோகன் தலைமையிலான துருக்கியின் ஆளும் கட்சியாக நீதி மற்றும் வளர்ச்சி கட்சி உள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் கட்சியை சேர்ந்த 48 வயதான அதாலே, துருக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சிறையில் இருக்கும்போதே கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவரது சிறைவாசம் ஒரு “மோசமான அநீதி” என்று தொழிலாளர் கட்சி அவரை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்தது.