Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ்நாட்டில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” - சுகாதாரத் துறை!

07:35 AM Nov 08, 2024 IST | Web Editor
Advertisement

பருவமழைக் காலத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது

Advertisement

வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அவர் இது குறித்து பேசுகையில், “பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவுவது இயல்புதான்.த மிழ்நாட்டில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்பு பூஜ்ய நிலையை அடையும்” என்றார்.

மேலும், தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என்றளவில் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது. மருத்துவமனைகளில் 100% காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று கூறினார்.

தற்போது, டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஜனவரி 2024 முதல் நவம்பர் 5 வரை, தமிழ்நாட்டில் 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டதால் 8 பேர் உயிரிழந்தனர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணமும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பைக் கண்காணிப்பதில் அரசு விழிப்புடன் உள்ளது. மேலும் பின்வரும் முக்கிய நடவடிக்கைகளுடன் மாநிலத்தில் மேலும் பாதிப்புகளைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, தடுக்கவும் அரசு தயார் நிலையின் உள்ளது.

Advertisement
Next Article