Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உஷாரா இருங்க மக்களே... காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
07:43 AM Mar 22, 2025 IST | Web Editor
Advertisement

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 25ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. பெருமபாலான பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10  மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

கன்னியாகுமரி

லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தூத்துக்குடி
திருநெல்வேலி
தேனி
தென்காசி

Tags :
IMDnews7 tamilNews7 Tamil UpdatesRainrain alertRain UpdateTn RainsWeatherWeather Updates
Advertisement
Next Article