ரூ.5 கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவை!
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவையை முதல் கட்டமாக ஒடிசாவின் கோரபுத் மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளார். முதல்கட்டமாக ஆறு மாவட்டங்களுக்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நகரங்களை இணைக்கக் கூடிய பல்வேறு வகையிலான போக்குவரத்து முறைகள் முன்னெடுப்பின்கீழ் மாநில அரசு 1,623 பேருந்துகளை கிராமப்புறப் பகுதிகளுக்கு ரூ.3,178 கோடி செலவில் இயக்கவுள்ளது. முதல்கட்டத்தில், 1,131 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் 63 லட்சம் மக்கள் பயனடைய உள்ளார்கள். மாவட்டத்தின் தலைநகருக்குக் கிராமப்புறங்களில் இருந்து செல்ல விரும்பும் பெண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.5 கட்டணத்தில் இந்தப் பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
காணொலி உரையின்போது முதல்வர் பட்நாயக், அதிநவீன பேருந்துகள் ஆறு மாவட்டங்களில் 234 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கவுள்ளன. இதனால் 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.