கனிமவள உரிமைத் தொகையை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம் - #SupremeCourt அனுமதி!
கனிமவள உரிமைத் தொகையை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது.
கனிம வளங்கள் மீதான வரி விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, கடந்த 2011ஆம் ஆண்டு நேரடியாக 9 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி பரிந்துரைத்தது.
இந்த தீர்ப்பில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்ததாவது:
"அரசியலமைப்பின் பட்டியல் 2, பிரிவு 50-இன் கீழ் கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. 1989 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, ராயல்டி என்பது வரி என்று கூறியது தவறானது.
அதே போல், நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.