Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நிரப்ப வேண்டும்" - டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்!

03:36 PM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நிரப்ப வேண்டும் என டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர்  ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நீட் PG
நுழைவு தேர்வு ரத்து, நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்
குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர்
ஜி.ஆர்.ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

"இன்று நாடு முழுவதும் நடைபெற‌ இருந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட்
தேர்வினை மத்திய அரசு இரவோடு இரவாக ரத்து செய்துள்ளது. இது இந்த அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. பல ஆண்டுகளாக மாணவர்கள் தங்களை தயார் செய்து படித்து வருகின்றனர். இதன்மூலம் மத்திய அரசு அதற்கான செலவுகளை ஏற்க வேண்டும்.

நீட் இளங்கலை மருத்துவ‌ தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதை மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, பொறுப்பேற்ற அவர் பதவி விலக வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மொழிவாரி மாநிலங்களை இன்றுவரை
ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே இனம் , ஒரே தேர்வு
என கொண்டு வருகிறார்கள்.

மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைத்தேர்வு நடத்தி சேர்க்கை நடைபெற
வேண்டும்.நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடிற்கு என்றும் எங்கள்
சங்கம் துணை நிற்கும். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களையும் கைப்பற்ற மத்திய அரசு சூழ்ச்சி செய்து இந்த தேர்வை நடத்துகிறது. நேர்மையான முறையில் வெளிப்படைத்ததன்மையுடன் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை
நடைபெற வேண்டும்.

இதையும் படியுங்கள் : ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

அரசு மருத்துவ இடங்களில் மட்டுமே 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால்
நிர்வாக இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு
பின்பற்றப்படவில்லை. எனவே ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீடு
பின்பற்றப்பட வேண்டும்.

தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின் மூலம் சமீபத்தில் நடைபெற்ற
நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழ் வரும் இளங்கலை, முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவர் மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தான் தேர்வு முறைகளை நிர்ணயித்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Dr. GR Ravindranathentrance exammedical studiesNEETNeetExamState Government
Advertisement
Next Article