Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நீட் தேர்வு வேண்டாம்" - மாநில கல்விக்கொள்கையின் பரிந்துரைகள் முதலமைச்சரிடம் சமர்பிப்பு!

11:50 AM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கொண்ட மாநில கல்விக் கொள்கை,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்து, மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. குழுவின்‌ தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதி முருகேசன்‌  நியமிக்கப்பட்டார். இக் குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு இணைந்து கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ளது. இதனை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குழுவினர் சமர்பித்தனர்.

இதையும் படியுங்கள் : “விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகள்” – தமிழ்நாடு விண்வெளி தொழிற்கொள்கை வெளியீடு!

மாநில கல்விக்கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

இது போன்ற பல்வேறு அம்சங்கள் மாநில கல்விக்கொள்கை பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன.

Tags :
CHIEF MINISTERCMOTamilNaduM.K.StalinREPORTstate education policysubmitted
Advertisement
Next Article