Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கந்தர்வகோட்டை புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

07:01 AM May 24, 2024 IST | Web Editor
Advertisement

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு தேர் திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அதனையொட்டி இந்த ஆண்டுக்கான திருவிழாவின் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் நேற்று (மே 23) விமரிசையாக நடைபெற்றது.

மேலும் ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. பின்னர் அந்தோனியாரின் திரு உருவம் தாங்கிய கொடியை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து தச்சங்குறிச்சி பங்குத்தந்தை பால்ராஜ் தலைமையில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஜாதி, மத பாகுபாடின்றி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று அந்தோனியாரை வழிபட்டனர். மேலும் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags :
festivalGandarvakottaiSt. Antonys Church
Advertisement
Next Article