Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SSHyderabadBiryani கடைக்கு சீல் - உணவு பாதுகாப்பு துறை அதிரடி!

07:04 PM Sep 21, 2024 IST | Web Editor
Advertisement

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பொன்னேரி எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையை தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் செயல்பட்டு வந்த எஸ்.எஸ். ஹைதராபாத்
பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட சிலருக்கு மயக்கம், வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து, சென்னை உணவு பாதுகாப்புத்துறை பொறுப்பு அதிகாரி சதீஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பொன்னேரி நகராட்சி நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதனும் சென்றிருந்தார்.

அந்த உணவகத்தில், கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவுகள் கெட்டுப் போயும், முறையாக வேக வைக்கப்படாமலும் இருந்த நிலையில் அவற்றை எடுத்து குப்பையில் கொட்டினர். மேலும், அங்கு சமையல் செய்பவர்கள் மற்றும் உணவகம் நடத்துபவர்களிடம் வாடிக்கையாளர்களுக்கு தரமாக உணவுகளை வழங்க வேண்டும், கெட்டுப்போன உணவுகளை வழங்க கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, தற்காலிகமாக கடையை மூடி சீல் வைத்தனர். இதுகுறித்து பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார், "தரமாக உணவு சமைக்கவில்லை என்றால் நிரந்தரமாக கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisement
Next Article