Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SSBN S4* | இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் - இயக்கிப் பார்த்தது இந்தியா!

10:30 AM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

75% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் 4வது நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா இன்று இயக்கிப் பார்த்து சோதனை செய்தது.

Advertisement

இந்திய கடற்படையில் தற்போது 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. இவற்றில் 6 ரஷ்யாவின் கிலோ வகையைச் சேர்ந்தது. 4 ஜெர்மனியின் எச்டிடபிள் ரகத்தை சேர்ந்தது. 6 பிரான்ஸ் நாட்டின் ஸ்கார்பீன் ரகத்தை சேர்ந்தவை. இதில், கடந்த 2018-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹன்ட் என்ற நீர்மூழ்கி கப்பல் மட்டும் அணு சக்தியில் இயங்க கூடியது.

இதில் 83 மெகா வாட் திறனுள்ள அணு உலை உள்ளது. மேலும் இது அணு ஏவுகணைகளை ஏவும் திறனுடையது. இவை எஸ்எஸ்பிஎன் என அழைக்கப்படுகிறது. இதே போன்ற மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் 6 ஆயிரம் டன் எடையில் ஐஎன்எஸ் அரிகாட் என்ற பெயரில் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு, பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்து கடற்படையில் சேர்க்க தயார் நிலையில் உள்ளது. ஐஎன்எஸ் அரிகாட் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இயக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த அக். 9-ம் தேதியன்று, பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்த மேலும் இரண்டு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இதில், மூன்றாவது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதாமான் தயாரிப்பு ஏற்கனவே நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பற்படையை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவின் நான்காவது மற்றும் சமீபத்திய அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் (SBC) கடந்த அக். 16-ம் தேதி அறிமுகப்படுத்தினார். 

இந்த 4வது நீர்மூழ்கிக் கப்பலில் குறிப்பிடத்தக்க வகையில் 75% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. தற்போது S4* என பெயரிடப்பட்டுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வலுப்படுத்துவது, இந்தியாவின் எதிரிகளுக்கு அணுசக்தித் தடுப்பையும், பெரிய கடற்கரைப் பகுதிக்கு பாதுகாப்பையும் வழங்கும். இந்நிலையில் 4வது நீர்மூழ்கிக் கப்பல்

சீன கடற்படையில் ஏற்கனவே 60 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. அதில் 6 SSBN அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், 6 SSN ரக நீர்மூழ்கி கப்பல்கள். சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க, இந்திய கடற்படைக்கு இன்னும் 18 டீசல் - எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், நான்கு அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள், 6 SSN ரக நீர்மூழ்கி கப்பல்கள் தேவை. இதேபோல் 6 ஆயிரம் டன் எடையில் எஸ்எஸ்என் எனப்படும் ‘ஹன்டர் கில்லர்’ நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

95% உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க 10 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் 4 SSN ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க பிறகு ஒப்புதல் அளிக்கப்படும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :
CCSindian navyINS AridhamanINS ArighaatINS ArihantINS ChakraIORNews7TamilRajnath singhShip Building CenterSSBN
Advertisement
Next Article