Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நிறைவு!

09:43 AM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா லட்சார்ச்சனை உடன்
நிறைவு பெற்றது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில் ஆண்டு தோறும் வருஷாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு வருடாபிஷேக விழா மஹாசாந்தி ஹோமத்துடன் தொடங்கியது.

திருமுக்குளத்தில் இருந்து கோயில் யானை மூலம் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  108 புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அதன்பின் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு 108 கலசாபிஷேகம், விஷேச திருமஞ்சனம், திருவாராதனம் சாத்துமுறை, தீர்த்தகோஷ்டி நடைபெற்றது.  இந்த நிலையில் ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு லட்சார்ச்சனை உடன் வருஷாபிஷேக விழா நிறைவு பெற்றது.

Tags :
festivalSriandal TempleSrivilliputhurVarushabhishekamVirudhunagar
Advertisement
Next Article