வெள்ளை மாளிகையின் AI ஆலோசகராக தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்- டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீராம் கிருஷ்ணன், இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்று கடந்த 2005-ம் ஆண்டு தன்னுடைய 21வது வயதில் அமெரிக்கா சென்று மைக்ரோசாஃப்ட் பணியில் இணைந்தார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வந்தார்.
இவர் பணிபுரிக்கின்ற மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் (எக்ஸ்), ஃபேஸ்புக், ஸ்னாப்சேட் என பல முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் பட்டேல், மற்றும் உளவுத் துறை இயக்குநராக துளசி கப்பாரட் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது டிரம்பின் ஆட்சிக்குள் மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஸ்ரீராம் கிருஷ்ணனும் இணைந்துள்ளார். அமெரிக்க தொழில்நுட்ப நிபுணரும், செய்யறிவு கொள்கை ஆலோசகராக இவரை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அவருடைய ஆட்சியில், வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றுவார் என அறிவித்துயுள்ளார். அரசின் முழுக் கொள்கையை வடிவமைக்கவும், ஒருங்கிணைக்கவும் ஸ்ரீ ராம் உதவுவார் என்று டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.