Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி!

03:10 PM Nov 20, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை கடற்படை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மைக்காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை கடற்படை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் இலங்கை கடற்படையின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மன்னார், மயிலட்டி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அரசின் இந்த புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
Sri Lanka GovernmentSri Lankan NavyTamilnadu Fishermen
Advertisement
Next Article