Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! -நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது...

07:29 AM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 

Advertisement

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 74 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

8 விசைப்படகுகள், 4 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மீனவர்கள், ஓராண்டு, 2 ஆண்டு மற்றும் 6 மாதம் சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் 170க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்து வைத்துள்ளது.

இதை கண்டித்து அண்மையில் தமிழக மீனவர்கள் போராட்டத்திலும் கூட ஈடுபட்டனர். இந்நிலையில் தான் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்தபோது எல்லையயை தாண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் நடவடிக்கையால், தமிழக மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags :
Fishermansri lanka navyTN fisherman
Advertisement
Next Article