இலங்கை இறுதிகட்ட போரில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா மனித உரிமை ஆணையம் உத்தரவு!
இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்ற காலகட்டம் மற்றும் அதற்கு பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும் ஐ.நா மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இடையில் இறுதிப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் எல்டிடிஈ அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த போரின் போது இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததாகவும், இந்த போரின் போது ஏராளமானோர் காணாமல் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இறுதிப்போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..
"இலங்கை இறுதிப் போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அத்துடன் போரில் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுப் படைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும். மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.