Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத் திருவிழா - கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

08:24 AM Feb 25, 2024 IST | Web Editor
Advertisement

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் மாசி மாத தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது.

Advertisement

108 வைணவ தலங்களில் மிக முக்கியமாக கருதப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத உற்சவம், ஆடிப்பூர திருத்தேரோட்டம் மற்றும் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், மாசி மாத தெப்பத்திருவிழாவும் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இதையும் படியுங்கள் : WPL 2024 : யு.பி. வாரியர்ஸை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி!

கடந்த 2016 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட தெப்பத் திருவிழா, 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவமானது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருமுக்குளம் என்ற குளத்தில் நடைபெறும். முதல் நாளான நேற்று ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் தெப்பத்தேரில் எழுந்து திருமுக்கூலித்தை மூன்று முறை சுற்றி வலம் வந்தார்.

இந்த குளத்தின் நான்கு கரைகளிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னாரை
தரிசனம் செய்தனர். நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் உற்சவம் என்பதால்
பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து
கொண்டனர் சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
Masi Festivalsri ANDAL KOYILSrivilliputhurTHEPPA THIRUVILAVirudhunagar
Advertisement
Next Article