Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SRHvsRR - குவாலிபயர் 2 போட்டி தொடங்கும் நிமிடம் வரை முழுமையாக விற்றுத்தீராத டிக்கெட்!

08:12 PM May 24, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகின்ற ராஜஸ்தான், ஹைதராபாத் இடையிலான குவாலிபயர் 2 போட்டி தொடங்கும் நிமிடம் வரை டிக்கெட் முழுமையாக விற்றுத்தீரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து பல மைதானங்களில் நடைபெற்று வந்த போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்த இறுதிப்போட்டியில் மோத உள்ள அணிகளுள் ஒரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மற்றொரு அணி எது என்று இன்று நடைபெறும் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிதான் முடிவுதான் செய்யும். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் இந்த டிக்கெட் விற்பனை இன்று போட்டி தொடங்கும் கடைசி நிமிடம் வரை விற்பனை செய்யப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கான போட்டியின் போது டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்து விடும். ஆனால் இன்று நடைபெறும் ராஜஸ்தான், ஹைதராபாத் இடையிலான குவாலிபயர் 2 போட்டிக்கான டிக்கெட் விற்பனை போட்டி தொடங்கும் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறாத நிலையில் டிக்கெட் விற்பனையில் இந்த அளவுக்கு மந்தம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
CricketCskIPL2024SRHvsRRTicket
Advertisement
Next Article