Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SRHvsRR - ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி!

09:34 PM May 24, 2024 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிபயர் போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

Advertisement

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து பல மைதானங்களில் நடைபெற்று வந்த போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு175 ரன்களை குவித்தது.

இதன்மூலம் 176 ரன்களை ராஜஸ்தானுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிளாசன் 50 ரன்களை குவித்தார். ராஜஸ்தான் சார்பில் டிரென்ட் போல்ட், அவேஷ் கான் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெயதேவ் உனத்கட் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள உள்ளது.

Tags :
CricketIPL2024pat cumminsRRvsSRHsanju samsonSRHvsRR
Advertisement
Next Article