#SRHvsRCB : சொந்த மண்ணில் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வென்றது ஆர்சிபி அணி!
ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
இந்த தொடர் முழுவதும் ஹைதராபாத் அணி எதிரணிகளை திக்குமுக்காடச்செய்து, அதிக ரன்களை அடித்து அபாரமாக விளையாடி வருகிறது. பெங்களூருவுடன் விளையாடிய கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணிலேயே எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெசிஸ் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதேபோல விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர். 3 பவுண்டர்கள், 1 சிக்சர் என அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த டு பிளெசிஸ், 4ஆவது ஓவரின் கடைசி பந்தில் நடராஜன் வேகத்தில் கேட்ச் கொடுத்த தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்த வந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டுவார் என்ற ரசிகர்களின் ஆசையை அவர் ஏமாற்றி 11 ரன்களில் வெளியேற, கடைசியாக க்ரீன் மற்றும் ஸ்வப்னில் சிங் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது.
கேப்டன் கம்மின்ஸ் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் குமார் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். அதன் மூலம் ஆர்சிபி வெற்றி பெற்றது. அந்த அணி இதற்கு முன்பாக தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி பவுலர்கள் ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.