Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

SRHvsLSG | லக்னோ அணிக்கு 191 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது!

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் சுற்றில் 191 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது!
09:41 PM Mar 27, 2025 IST | Web Editor
Advertisement

18வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்தில் இன்று(மார்ச்.27)  ஹைதராபாத் மற்றும் லக்னோ இடையேயான லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

முதல் இன்னிங்ஸை ஆடிய ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் வெறும் 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். தொடர்ந்து 47 ரன்கள் எடுத்து டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்தார்.

அதன் பின்பு களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 32 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 26 ரன்களும், அனிகேத் வர்மா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து பேட் கம்மிங்ஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தமாக 20 முடிவுகளில் ஹைதராபாத் அணி  9 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணிக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்போட்டியில் ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Tags :
IPL2025LSGpat cumminsRishabh PantSRHSRHvLSG
Advertisement
Next Article