Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SRHvsCSK : 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!

06:35 AM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் போட்டியின் நேற்றைய தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 18வது லீக் போட்டி நேற்று (ஏப். 5) தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றதுஇந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவிந்தரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். மொத்தமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 45 ரன்கள் எடுத்திருந்தார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில், புவனேஸ்வர் குமார், நடராஜன், கம்மின்ஸ், ஷபஸ் அகமது, உனட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம், மொத்தமாக ஐந்து விக்கெட்களை எடுத்தனர். அதன்பின், 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவர் களமிறங்கினர். அதில் டிராவிஸ் ஹெட் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடத்தொடங்கினார். அவர் ஒரு சிக்ஸ் மற்றும் மூன்று பவுண்டரிகளை அடித்து, 24 பந்தில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது, தீக்‌ஷனாவின் பந்தில் அவுட்டானார். அடுத்து ஆடிய அபிஷேக் சர்மா, 12 பந்துகளில் 4 சிக்ஸ் மற்றும் மூன்று பவுண்டரிகள் விளாசி 37 ரன்கள் எடுத்திருந்தபோது, சஹார் பந்தில், ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன்பின், ஏடன் மக்ரம் மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் அடுத்தடுத்து நிதானமாக ஆடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். குறிப்பாக, 36 பந்துகளில் ஏடன் மக்ரம், ஒரு சிக்ஸ் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசி 50 ரன்கள் அடித்தார். ஆனால் அரை சதம் விளாசிய மகிழ்ச்சி நிலைப்பதற்குள், அலியின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அதன்பின், ஷபஸ் அஹமதுவும் 18 ரன்கள் எடுத்திருந்தபோது, எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார்.

அதன்பின் ஐந்தாவது ஆக களமிறங்கிய கிளசன் 10 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 14 ரன்களும் அடித்து, 18.1 ஓவர் முடிவில் வெற்றி இலக்கான 166 ரன்களை எட்டியது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது.

Tags :
Ajinkya RahaneCaptain Coolchennai super kingsCSK vs SRHHyderbadMS DhoniMSDNews7Tamilnews7TamilUpdatesRachin RavindraRuturajShivam DubeSunrisers Hyderabad
Advertisement
Next Article