#SpiderMan4 | ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியீடு!
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகும் ஸ்பைடர் மேன் 4 திரைப்படம் வெளியிடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரமான ஸ்பைடர்-மேன், நகைச்சுவைப் புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகிய இரண்டிலுமே உலக அளவில் மிகப் பிரபலமான ஒரு சூப்பர் ஹீரோ. 2002ம் ஆண்டு "ஸ்பைடர்-மேன்', 2004ட் ஆண்டு "ஸ்பைடர்-மேன் -2', 2007ம் ஆண்டு ஸ்பைடர் மேன் 3 ஆகிய திரைப்படங்கள் முதலில் வெளிவந்தன.
பிறகு, 2012ம் ஆண்டு "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன்', 2014ம் ஆண்டு "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன் 2' மற்றும் 2017ம் ஆண்டு "ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்' , 2019ம் ஆண்டு ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம், 2021ம் ஆண்டு வே ஹோம் என இதுவரை 8 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கொலம்பியா ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் ஸ்பைடர் மேன் 4 உருவாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : “எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
இந்த திரைப்படம் ஜூலை 24ம் தேதி வெளியாகுமென ஆங்கில ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ மே 1, 2026ம் ஆண்டு வெளியானதுக்குப் பிறகு 2 மாதம் கழித்து வெளியாகவுள்ளது. அடுத்தாண்டு மே மாதத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக நடிகர் டாம் ஹோலண்ட் கூறியுள்ளார்.
கடைசியாக வெளியான ஸ்பைடர் மேன் உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8ஆயிரம் கோடி) வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்துக்குப் பிறகு இது வெளியானது. அந்த வகையில் 2026ம் ஆண்டு அஞ்சர்ஸ் திரைப்படத்துக்குப் பின் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.