Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SpecialTrain | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்... எங்கிருந்து எங்கே இயக்கப்படுகின்றன தெரியுமா?

07:17 PM Oct 29, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் நாளையும் இயக்கப்பட உள்ளன.

Advertisement

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (அக்.31) கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. எனவே சென்னையில் தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலரும் கடந்த சனிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். சென்னையில் இருந்து நாளை இரவு வரை ஏராளமான மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக 11,176 சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக இன்றும், நாளையும் (அக்.29,30) சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

அதன்படி, திருச்சி நோக்கி செல்லும் சிறப்பு ரயில் (எண். 06191) தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கும், கன்னியாகுரி நோக்கி செல்லும் ரயில் (எண். 06049)தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கும், மதுரை நோக்கி செல்லும் ரயில் (எண். 06075) மாலை 5.10 மணிக்கும் புறப்பட்டது. இதே போன்று சிறப்பு ரயில்கள் நாளையும் இதே நேரத்தில் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Diwalifestivalnews7 tamilspecial trainTambaram
Advertisement
Next Article