Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
10:03 PM Jan 23, 2025 IST | Web Editor
Advertisement

குடியரசு தினம் வருகிற 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில்,  கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பதாவது,

Advertisement

"இந்த சிறப்பு ரயிலானது (06053) சென்னை எழும்பூரில் இருந்து 24-ம் தேதி (நாளை) இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதையும் படியுங்கள் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்!

இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, கொடைக்கானல் ரோடு, மதுரை, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக கன்னியாகுமரியை வந்து சேரும்.மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து (06054) 26-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்"

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement
Next Article