Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கன்னியாகுமரியில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்!

03:26 PM Feb 08, 2024 IST | Web Editor
Advertisement

அயோத்தி ராமர் கோயிலை தரிசிக்க கன்னியாகுமரியில் இருந்து சிறப்பி ரயில் சேவை தொடங்கியுள்ளது.   

Advertisement

அயோத்தியில் ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜன.22-ம் தேதி  பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அடுத்த நாளிலிருந்து பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.  இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலை தரிசிக்க தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்து சிறப்பி ரயில் சேவை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:

"ரயில் எண்.06517 கொண்ட சிறப்பு ரயில்,  இன்று (பிப்.08) காலை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மங்களூரு சந்திப்பு ரயில் நிலையம் வழியாக அயோத்திக்குச் செல்கிறது.   இந்த ரயில் இன்று (பிப்.08) மாலை 5.50 மணிக்கு மங்களூரு சந்திப்பை அடைந்து,  அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் பிப்.11-ம் தேதி அதிகாலை அயோத்தியில் உள்ள தர்ஷன் நகர் ரயில் நிலையத்தை வந்தடையும்.  பிப்.12-ம் தேதி காலை 8 மணிக்கு அயோத்தியில் இருந்து திரும்பும் இந்த ரயில் பிப்ரவரி 14-ம் தேதி மாலை மங்களூரு சந்திப்பை அடையும்."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AyodhyaAyothi Ramar TempleCoimbatoreRamar MandirRamar Templetamil nadu
Advertisement
Next Article