வேளாங்கண்ணி பேராலய பெருவிழா! சென்னையிலிருந்து #Specialtrain இயக்கம்!
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேறுவதால், அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!
மேலும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 29 ஆம் தேதி காலை 3.30 மணிக்குச் செல்கிறது. மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30-க்கு தாம்பரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.