Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை - திருநெல்வேலி இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கம்! தென்னக ரயில்வே அறிவிப்பு!

06:53 PM Oct 26, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி - சென்னை இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை - திருநெல்வேலி இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண் : 06074 திருநெல்வேலியில் இருந்து நாளை மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துசேரும். ரயில் எண் : 06073 சென்னை சென்டரலில் இருந்து நாளை மறுநாள் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 29 ஆம் தேதி காலை 7.15 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.

நாளை திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது சேரமான்தேவி, கல்லடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருதங்கல், விருதுநகர், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்து கடவு, போதனூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி , அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiDiwalifestivalspecial trainTirunelveli
Advertisement
Next Article